""ஹலோ தலைவரே, இந்தியாவின் தலையெழுத்தை நிர்ணயிக்கப் போகும் இந்த ஜனநாயகத் திருவிழாவில் காலையிலேயே வாக்குச்சாவடிக்குப் போய் என் ஜனநாயகக் கடமையை நிறைவேத்திட்டேன். நீங்க?''’

""நம்ம கைல இருக்கும் வலிமையான ஒரே ஆயுதம் வாக்குரிமைதான். 5 ஆண்டுக்கு ஒருமுறை அதைப் பயன்படுத்தக் கிடைக்கும் வாய்ப்பை நழுவவிடுவேனா? நானும் என் ஆயுதத்தை வலிமையாவே பயன்படுத்திட்டேன். பொதுமக்கள் கிட்டேயும் ஒரு மவுனப் புரட்சி தெரிந்ததே?''’

e

Advertisment

""ஆமாங்க தலைவரே.. 96 வயது மூத்த அரசியல்வாதியான பேராசிரியர் அன்பழகன் மூக்கில் டியூப்போடு வந்து ஓட்டுப் போட்டது எல்லாருக்கும் உத்வேகம் கொடுத்திடிச்சி. இந்த முறை இளைஞர்கள், பெண்கள் மட்டுமல்லாமல் 80 வயதுக்கு மேற்பட்ட முதியவர்களும் வெயிலைப் பார்க்காமல் வந்து வரிசையில் நின்று ஓட்டுப் போட்டிருக்காங்க. ஒரு சிலர் மயக்கமாகி விழுந்து இறந்து போனது கொடுமை. இந்த முறை தேர்தல் பிரச்சாரத்தில் செல்போன் சமூக வலைத்தளங்க ளோட பங்கு வலிமையா இருந்தது. முழு நேர பொதுக்கூட்ட பிரச்சாரத்தில் ஹைலைட்டான விஷயங்களை மட்டும் எடிட் பண்ணி வாட்ஸ் ஆப்பில் அனுப்புற டெக்னாலஜியால எல்லாக் கட்சிகளோட சாதகம் பாதகம் ரெண்டும் மக்கள் கிட்டே போய் சேர்ந்து, அவங்களுக்கு தகுந்த அம்சங்களை தேர்ந்தெடுத்துக்கிட்டாங்க. அதனால யாரை ஆதரிச்சிருக்காங்க… யாரை எதிர்த்திருக் காங்கங்கிற டென்ஷன் எல்லாக் கட்சிகளுக்கும்.''’

""கோயம்பேட்டில் பஸ்ஸுக்காக பெரிய அளவில் காத்திருந்த பயணிகளிடம் அந்தக் கோபத்தைப் பார்க்க முடிஞ்சிதே?''’

a

Advertisment

""உண்மைதாங்க தலைவரே, தேர்தலை யொட்டி புனித வெள்ளி, சனி, ஞாயிறுன்னு சேர்ந்தாப்ல 4 நாள் விடுமுறை வந்ததால், அவங்கவங்களும் தங்கள் சொந்த ஊருக்குப் போய் ஜனநாயகக் கடமையை ஆற்றும் ஆர்வத்தில் குடும்பம் குடும்பமா கோயம்பேடு வந்திருந்தாங்க. வாக்களிப்பது அனைவரின் கடமைன்னும், 100 சதவீத வாக்குப்பதிவுன்னும் விளம்பரம் செஞ்ச தேர்தல் ஆணையம், அதற்கேற்ற ஏற்பாடுகளை சரியா செய்யலை. அ.தி.மு.க. அரசாங்கத்தோடு கூட்டணி அமைச்ச தேர்தல் ஆணையம், அந்த அரசாங்கத்து மூலமா செய்ய வேண்டிய அடிப்படை ஏற்பாடுகளை செய்யலை. கோயம் பேட்டில் பேருந்து கிடைக்காத மக்கள் மறி யல்ல இறங்கிட்டாங்க. அவங்க கொதிப்பை சமாளிக்கத் தெரியாத காவல்துறை, தடியடி நடத்தி முரட்டுத்தனத்தைக் காட்டிடிச்சி.''

""தேர்தல் நேரத்தில் நடத்தப்பட்ட இந்தத் தாக்குதல் அவங்க கோபத்தை மேலும் அதிகரிச்சிருக்குமே.''…

""ஆமாங்க தலைவேர... விடுமுறையில் சொந்த ஊருக்குப் போவது மட்டும்தான் அவங்க எண்ணமா இருந்திருந்தால், மறுநாள் கூட பயணத்தைத் தள்ளி வச்சி ருப்பாங்க. ஆனால் ஓட்டுப் போட்டாக ணுமேங்கிற ஆர்வம் அவங்களுக்கு அதிகமா இருந்ததால்தான், புதன்கிழமை இரவு ரயிலையும் பேருந்தையும் மொய்க்க ஆரம்பிச்சாங்க. பேருந்துகளின் டாப்பில் ஏறியும் ரயில் என்ஜின்களின் பக்க வாட்டுகளில் நின்றபடியும் பொதுமக்கள் பயணிச்சதை இந்தமுறை பார்க்க முடிஞ்சிது.''’

""இத்தனை ஆர்வத்துக்கு ஏற்றாற்போல வாக்குப்பதிவு சதவீதம் இருக்குதுன்னு நினைக்கிறியா?''

""பொதுவா, 70 சதவீதத்தைத் தொட் டாலே அது நல்ல அளவுதான். ஆனாலும், தமிழ் நாட்டைப் பொறுத்தவரை இப்ப பதிவானதைவிட அதிகமா பதிவாகியிருக்கணும். ஆனா, இந்தியாவி லேயே தமிழகத்தில்தான் தேர்தல் ஆணையம் அதிக குளறுபடிகளுக்கு வழிவகுத்து, தோல்வி அடைஞ் சிருக்குன்னு டெல்லி வரைக்கும்கூட பேசுறாங்க. மற்ற சில மாநிலங்களில் சட்டம் ஒழுங்கு பிரச்சினையைக் காட்டி தேர்தல் தேதி ஒத்திவைக்கப்பட்டிருக்கு. ஆனா, பணப் புழக்கத்தைக் காரணம் காட்டி, தேர்தல் ரத்து செய்யப்பட்ட ஒரே தொகுதி வேலூர்தான். பணம் பறிமுதல் செய்யப்பட்ட விவகாரத்தில் தி.மு.க. வேட் பாளரான கதிர் ஆனந்த் மீது வழக்கைப் பதிவு செய்து நடவடிக்கை எடுக்கப்பட்ட பிறகும் எதற்கு தேர்தலை ரத்துசெய்யணும்னு டெல்லி தேர்தல் ஆணையத் திலேயே ஒரு சில அதிகாரிகள் எதிர்க்கேள்வி எழுப்பி யிருக்காங்க. அதேபோல் வேலூரில் தேர்தல் ரத்தான தில் முதல்வர் எடப்பாடிக்கே விருப்பமில்லையாம். அதோட, ஆண்டிப்பட்டி, தூத்துக்குடி, ராமநாத புரம்னு எதிர்க்கட்சி வேட்பாளர்களை மட்டுமே குறிவச்சி தேர்தல் ஆணைய உத்தரவின் பேரில் ரெய்டு கள் நடத்தப்பட்டிருப்பதும், தேர்தல் ஆணையத்துக்கு எதிரான சர்ச்சைகளை பலமா எழுப்பியிருக்கு.''’

e

""தூத்துக்குடியில் கனிமொழி வீட்டில் நடத்தப்பட்ட ரெய்டு குறித்து டெல்லியே கேள்வி எழுப்புச்சாமே?''’

""ஆமாங்க தலைவரே. தூத்துக்குடி டீக்கடையில் யாரோ ஒரு ஆள், கனிமொழி கிட்ட போய் காசு வாங்கிடணும்னு பேச, அதைக் கேட்ட ஒரு போலீஸ்காரர் உடனயா புலனாய்வுப் புலியா மாறி, மாவட்ட எஸ்.பி.யின் கவனத்துக்கு இதைக் கொண்டு போயிருக்கார். எஸ்.பி.யோ, அதே ஸ்பீடில் தமிழகத் தேர்தல் ஆணையத்திடம் இது குறித்துச் சொல்லியிருக்கார். தமிழகத் தேர்தல் ஆணைய இணை ஆணையரான பாலாஜி பரபரப் பாகி, வருமான வரித்துறைக்கும் தூத்துக்குடி மாவட்ட ஆட்சியருக்கும் தகவல் கொடுத்திருக் கார். இதைத் தொடர்ந்துதான் கனிமொழி தங்கி யிருந்த வீட்டை அதிரடியாக முற்றுகையிட்டு, தோண்டித்துருவி பரபரப்பை ஏற்படுத்திட்டு, கடைசியில் ஒண்ணும் எடுக்கலைன்னு கனிமொழி கிட்டேயே எழுதிக்கொடுத்துட்டு கிளம்பிடிச்சி. இந்த விவகாரம் டெல்லி தலைமைத் தேர்தல் ஆணையத்துக்குப் போக, எதுக்கு இப்படியொரு ரெய்டுன்னு இங்குள்ளவர்களை ’ரெய்டு விட்டிருக் கிறார்கள். இவர்கள், சாரி.. ராங் இன்பர்மேஷனை நம்பிட்டோம் என்று தலையை சொறிந்திருக்காங்க. பாஜ.க. போட்டியிடுற தொகுதியிலே கனிமொழிக்கு இன்னும் செல்வாக்கு கூடிடிச்சின்னு பா.ஜ.க. தலைமைக்கும் ரிப்போர்ட் போயிருக்கு..''’

""எதிர்க்கட்சிகளை குறி வச்சு, ரெய்டு நடத் திய நேரத்தில், வாக்காளர்களுக்கு பூத் ஸ்லிப்பை ஒழுங்கா கொடுத்திருந் தாலே, இன்னும் அதிக மான வாக்காளர்கள் ஓட்டுப் போட்டிருப் பாங்கப்பா..''’

e

""வாக்காளர்கள் படத்துடனும் வாக்குச் சாவடி பற்றிய விவரத் துடனும் பூத் ஸ்லிப் தர வேண்டியது தேர்தல் ஆணையத்தோட முக் கியமான வேலை. அதை சரியா கொடுக்கலைங்கிற புகார் எல்லா இடத்தி லும் கிளம்பியிருக்கு. அதேபோல் அரசு ஊழியர்களுக்கு தபால் ஓட்டும் சரியாப் போய்ச் சேரலையாம். இந்த லட்சணத்தில் தேர்தலன்னைக்கு மதியமே 700-க்கும் மேற்பட்ட பூத்துக்களில் ஓட்டு எந்திரம் வேலை செய்யலைங்கிற புகார். அதோடு, பல பேருக்கு வாக்காளர் அடையாள அட்டை இருந்தும் வாக் காளர் பட்டியலில் பேர் இல்லாததால ஓட்டுப் போட முடியலை. ஒரே வீட்டில் அம்மாவுக்கு ஓட்டு இல்லை. மகனுக்கு இருக்குது. மனைவிக்கு இருக் குது, கணவனுக்கு இல்லைன்னு நிறைய சிக்கல்கள்.''

""கன்னியாகுமரியில் மீனவர்களோட வாக்கு களும், பல இடங்களில் முஸ்லிம் மக்களின் வாக்கு களும் வாக்காளர் பட்டியலில் இல்லை. வாக்காளர் அடையாள அட்டையோடு வந்து ஓட்டளிக்கும் உரிமையைக் கோரி கன்னியாகுமரி தொகுதியில் மீனவர்கள் போராடியும், வாக்களிக்கும் வாய்ப் பில்லைன்னு கலெக்டர் சொல்லிட்டாரு. அதே நேரத்தில் நடிகர்கள் சிவகார்த்திகேயன், ஸ்ரீகாந்த் போன்றவங்களுக்கு பட்டியலில் பெயர் இல்லாத போதும் சேலஞ்ச் ஓட்டுங்குற முறையில் அவங் களுக்கு வாக்களிக்கிற உரிமை அளிக்கப்பட்டிருக்கு. இது மாதிரி சாதாரண மக்களுக்கு ஏன் தரலைன்னு அறந்தாங்கியில் தேன்மொழிங்கிற வாக்காளர் தொடங்கி பல ஊர்களிலும் மல்லுக்கட்டி யிருக்காங்க.''

""ஒரு பக்கம் போலி வாக்காளர்கள்.. இன்னொரு பக்கம் நிஜமான வாக்காளர்களுக்கு பேரு இல்லை.. என்ன காரணம்?''

""அதிகாரிகள் தரப்பில் விசாரிச்சப்ப, தமிழகத் தேர்தல் அதிகாரியா இருக்கும் சத்திய பிரதா சாகு, மெட்ரோ வாட்டர் நிர்வாக இயக்குநரா இருந் தப்பவே அமைச்சர் வேலுமணிக்கு நெருக்க மானவரா செயல்பட்டவர். அதேபோல் தேர்தல் ஆணைய இணை ஆணையர் பாலாஜியும், முன்னாள் சென்னை மாநகராட்சி ஆணையரான கார்த்திகேயனும் கூட அமைச்சர் வேலுமணியின் நெருக்கமான நட்புக்குரியவர்கள். இந்த டீம்தான் எடப்பாடி அரசுக்கு ஆதரவாக பல்வேறு காரியங்களை அரங்கேற்றி, வாக்காளர் பட்டியல் உள்பட தேர்தலையே குளறுபடியான தேர்தலாக ஆக்கிவிட்டது என்கிறார்கள்.''’

""இப்படிப்பட்ட தேர்தலை எதிர்க்கட்சிகள் எப்படி எதிர்கொண்டிருக்கு?''’

""தி.மு.க.வைப் பொறுத்தவரை கனிமொழி, டி.ஆர்.பாலு, தயாநிதி மாறன், ஆ.ராசா போன்ற வலுவான வேட்பாளர்கள் வாக்காளர்களின் மன நிலையைப் புரிஞ்சி செயல்பட்டிருக்காங்க. இன்னும் சில வேட்பாளர்களின் தொகுதியை மாஜி மந்திரி கள் கவனிச்சிக்கிட்டாங்க. செலவு செய்ய முடியாத ஒரு சிலர் மட்டும், கடைசி நேரத்தில், கட்சித் தலை மையில் இருந்து பணம் வரும்ன்னு எதிர்பார்த்துக் காத்திருந்தாங்க. ஆனா, தி.மு.க. தலைமை அந்த எதிர்பார்ப்பை நிறைவேத்தலையாம். அங்கெல்லாம் கொஞ்சம் சுணக்கம் தெரிஞ்சிருக்கு.''

""கூட்டணிக் கட்சியான காங்கிரசோட நிலை?''

""பசைப் பார்ட்டிகளான வசந்தகுமார், கார்த்தி சிதம்பரம் போன்ற வேட்பாளர்கள் சொந்த பலத்தில் தாராளம் காட்டினாங்க. திருச்சியில் போட்டியிட்ட திருநாவுக்கரசர், இந்த விசயத்தில் பிடிகொடுக்கலை. எதிர்த்து நிற்கும் தே.மு. தி.க.வுக்காக அ.தி.மு.க. களமிறங்கி ஓட்டுக்கு 500 ரூபாய் கொடுக்குதுன்னு கட்சிக்காரர்கள் எடுத்துச் சொன்னப்ப, மக்கள் நம்ம பக்கம் இருப்பதால, காசு கொடுக்காமலே ஜெயிக்கலாம்னு சொல்லிட் டாராம். அதேசமயம் தி.மு.க. மா.செ.வும் மாஜி மந்திரியுமான கே.என்.நேரு தொகுதி மக்களின் எதிர்பார்ப்பை புரிஞ்சி ஓரளவு செயல்பட்டிருக் காரு. பெரும்பாலான காங்கிரஸ் வேட்பாளர்கள் கட்சித் தலைமை கொடுத்ததை பூட்டி வச்சிட் டாங்க. ஒரு வேளை முடிவு சரியில்லாமல் போனால் தி.மு.க. கைகொடுக்கவில்லைன்னு மேலிடத்தில் சொல்லிக்கலாம்னு நினைக்கிறாங்க. ஆனா, காங்கிரசின் டெல்லித் தலைமையோ தமிழக நிலவரம் பற்றி நல்லாவே தெரிஞ்சி வச்சிருக்காம்.''’

""இந்தத் தேர் தல் களத்தை கவு ரவப் பிரச்சினையா கருதுற பா.ம.க. , அ.ம.மு.க. தரப்பில் க்ளைமாக்ஸ் வேலைகள் எப்படி இருந்தன?''

""பா.ம.க.வைப் பொறுத்தவரை வாக்காளர்களை பர வலா கவனிச்சிடிச்சி. காரணம் தாங்கள் களமிறங்கிய 7 தொகுதியிலும் தங்க ளுக்கு எதிராக உதய சூரியன் சின்னமே நின்றதால், கரன்ஸி விசயத்தில் கவனமா இருந்தாங்க. அதே போல், பூத்தை கைப் பற்றணும்னு பா.ம.க. தரப்பில் சிக்னல் காட்டப் பட்டதால், தி.மு.க. உஷாராகி, பா.ம.க. ஏஜெண்டுகளுக்கு வலை வீசுவதை அறிந்த பா.ம.க., உடனடியா அவங்களுக்கு கிஃப்ட் கொடுத்து சமாதானப்படுத்தியிருக்கு. அ.ம.மு.க. தினகரனோ தன் வேட்பாளர்களிடம் நான் 5 ’சி’ தருவேன், நீங்கள் 5 ’சி’ ரெடிபண்ணி வச் சிக்கிட்டு செலவு பண்ணணும்னு சொல்லியிருந் தார். ஆனா, தலா 2 ‘சி’மட்டுமே கட்சித் தரப்பிலிருந்து தரப்பட்டிருக்கு. வேட்பாளர்கள் யோசிச்சப்ப, ஜெயிக்கலைன்னா நஷ்ட ஈடு தர்றேன்று சொல்லியிருக்காராம் தினகரன். அதை நம்பி, தொகுதி மக்களை அ.ம.மு.க. வேட்பாளர்கள் கவனிச்சிருக்காங்க.''’

""தேர்தல் களத்தை அதிகாரிகளும் உற்று கவனிச்சது சம்பந்தமான தகவலை நான் சொல்றேன். தேர்தல் முடிவு எப்படி இருக் கும்னு கோட்டையில் இருக்கும் ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் மத்தியில் ’பெட்டிங்’ நடக்கு தாம். இதில் பெரும்பாலான அதிகாரிகள் மத்தியிலும் மாநிலத்திலும் ஆட்சி மாற்றம் இருக்கும்னு பெட்டிங் கட்டியிருக்காங்களாம். இந்த செய்தி உளவுத்துறை மூலம் முதல்வர் எடப்பாடி காதுக்குப் போக, அவர் ஷாக் ஆகியிருக்காரு.''